Posts

Showing posts from 2018
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

என்னியோ மாரிகோனி

சில பாடல்களைக் கேட்கும்போது, சில படங்களைப் பார்க்கும்போது டைம் டிராவல் செய்ய வேண்டும் என்ற இச்சை கட்டுக்கடங்காமல் வரும். ஸ்பேஸ் ஒடிசி திரைப்படத்தின் டைட்டில் கார்டை என் 15 இன்ச் லேப்டாப்பில் பார்த்தபோது என்னத்துக்குடா லேட்டா பொறந்த என்று கடுப்பாக இருந்தது. 1968‍ல் பெரிய திரையில் அந்த டைட்டில் ஓடும்போது கூட்டத்தோடு கூட்டமாக நானும் வாயைப் பிளந்தபடி நுகர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அதே போல் சில பாடல்களைக் கேட்கும்போது "இதை ரிக்கார்டிங் ரூமில் நூறு வாத்தியங்கள் முழங்க உருவாக்கும்போது கூட இருந்திருக்க வேண்டும்" என்று தோன்றும். காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் 'நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் தா' பாடலை எப்பொழுது கேட்டாலும் டைம் டிராவல் செய்து அதன் ரிக்கார்டிங்கைப் பார்க்க வேண்டும் என்று ஏக்கமாக இருக்கும். அதேபோல்தான் இந்தப் பாடல் . பேரரக்கன் என்னியோ மாரிகோனி போட்ட இசை. கில்பில் படத்தின் என்ட் கார்டில் 'நவஜோ ஜோ' என்று ஒரு படத்தின் பெயர் வித்தியாசமாக இருக்கவே, சரி பார்ப்போமே என்று பார்த்தேன். அது நவஜோ இல்லை, நவஹோ என்ற தகவலைத் தவிர அத்திரைப்படத்தில் எனக்கு வேறு எத...

மேஜர் தம்பி

தம்பிக்கு இன்றோடு 18 வயதாகிறது. திடீரென்று சென்ற மாதம் “வோட்டர் ஐடி ரெஜிஸ்டர் பண்ணணும், கூட வா” என்று அவன் கூப்பிட்டபோது மலைப்பாக இருந்தது. ஒன்னாங்கிளாஸ் படிக்கையில் டீச்சர் ஒவ்வொருவராக எழுப்பி எத்தனை அக்கா தங்கச்சி அண்ணன் தம்பி என்று கேட்டுக்கொண்டிருந்தார். ஒவ்வொருவராக எழுந்து இரண்டு அக்கா என்றோ, ஒரு தம்பி என்றோ சொல்லி உட்கார்ந்தனர். எனக்கு அது என்னமோ மார்க் போலத் தோன்றியதோ என்னவோ, என் முறை வந்ததும் எனக்கு யாரும் கூட இல்லை என்று அழுதுகொண்டே சொன்னேன். மொத்த கிளாசும் சிரித்ததும், அதை வீட்டிற்கு வந்து விசும்பிக்கொண்டே சொன்னதும் நேற்று நடந்ததுபோல் இருக்கிறது. பிறந்த நாள் பரிசாக இரண்டு புத்தகங்களைக் கொடுத்திருக்கிறேன். “உனக்குள் இருக்கும் சிறுவனுக்கு” என்று எழுதி ‘Diary of a Wimpy Kid'-டின் புதிய புத்தகம் ஒன்று. சிறு வயதிலிருந்தே அவன் அப்புத்தகத்தை வாங்கி சேமித்துக்கொண்டிருக்கிறான். இது பதினொன்றாவது புத்தகம் என்று நினைக்கிறேன். இன்னொரு புத்தகமாக எதைக்கொண்டுக்கலாம் என்று எனக்கு யோசிக்க அவசியமே இருக்கவில்லை. இதை இவ்வளவு தாமதமாக வாசித்துவிட்டோமே, அது சற்றே சீக்கிரம் என் கைக்கு வந்திருக்...

எலிமென்டரி

Image
அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'எலிமென்டரி' ஷெர்லாக் ஹோம்ஸ் சீரியலும், பிரிட்டனின் பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஷெர்லாக் சீரியலும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் துவங்கின. அதனாலோ என்னவோ, இரண்டையும் ரசிகர்கள் ஒப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். எனக்கு இவை இரண்டையும் ஒப்பிடுவதில் உடன்பாடு இல்லை. இரண்டும் வெவ்வேறு உலகத்தில் இயங்குபவை. தனிப்பட்ட அளவில் எனக்கு பெனடிக்ட் கும்பர்பேட்ச் சிறந்த ஷெர்லாக்காகத் தெரிந்தாலும், எலிமென்டரி சீரியலில் வரும் சில காட்சிகளும் தருணங்களும் பிபிசி சீரியலைப் போகிற போக்கில் தூக்கி சாப்பிட்டு விடும். பிபிசி ஷெர்லாக் ஒரு ஹீரோ. ஆனால் எலிமென்டரி ஷெர்லாக் நம்மைப் போன்ற ஒருவன்; போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி மீள்பவன்; அவனுக்கும் உடல் உபாதைகள் வரும்; சக மக்களோடு சேர்ந்து பயணிக்கும் நிர்பந்தம் இருக்கும். இவற்றையெல்லாம் செய்தும்கூட அவன் ஒரு டிபிக்கல் ஷெர்லாக்காகவும் இருப்பான். அவ்வாறு இருக்க முயன்று இயல்பாகக் கஷ்டப்படுவான்;அதன் பாதிப்புகளை அனுபவிப்பான். எலிமென்டரியை நான் ஒரு சைக்கலாஜிக்கல் டிராமாவாகத்தான் வகைப்படுத்துவேன். ஒவ்...

மன்னிப்பு

சமீபகாலத்தில் தமிழ்நாட்டில் மன்னிப்பு கேட்பதற்கு மிகவும் அருகில் வந்தது சிவக்குமார்தான். மற்ற அபாலஜிக்கள் எல்லாம் அபாலஜியே கிடையாது. 1. தவறு இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் (நிபந்தனை வைத்தல்) 2. உண்மைக்குப் புறம்பாக இருப்பின் பகிர்ந்தது தவறுதான். 3. பெருவாரியானவர்கள் தவறு என்று நினைப்பதால் மன்னிப்பு கேட்கிறேன் (சிவக்குமார்) 4. என் செயல்களுக்கு வருந்துகிறேன் (மறைமுகப் பொறுப்புத் துறப்பு). 5. தவறுகள் நடப்பது இயற்கை, ஆகவே... (நீர்த்துப்போகச்செய்தல்) 6. என்னையறியாமல் புண்படுத்திவிட்டேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் சொற்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் என்று நினைக்கவில்லை (தான் சரியாகத்தான் பேசினேன் என்று முட்டுக்கொடுத்தல்). கடைசியாக சிவக்குமார் 'வெரி சாரி' என்றார். அதுதான் அபாலஜி. மன்னிப்பதும் மன்னிக்காமல் இருப்பதும் அந்தப் பையனின் முடிவு. அந்த 'வெரி சாரி' ஆனால் அரிய நிகழ்வு.

அசாசின்ஸ் க்ரீட் ஒரிஜின்ஸ்

Image
'அசாசின்ஸ் க்ரீட்' வீடியோ கேம் சீரிசில் கடைசியாக வந்த ‘அசாசின்ஸ் க்ரீட் ஒரிஜின்ஸ்’ வீடியோ கேமை இப்பொழுதுதான் முழுமையாக அனுபவிக்க முடிந்தது. அசாசின்ஸ், டெம்ப்ளார்ஸ் என்று இரண்டு எதிரெதிர் குழுக்கள் உலகம் முழுவதும் காலம் காலமாகப் போரிட்டு வருகின்றன. இரண்டுமே அமைதியை விரும்புபவை, ஆனால் வழிமுறைகள் வெவ்வேறு. ஒழுங்கின் மூலமாகத்தான் அமைதியைக் கொண்டுவர முடியும் என்று டெம்ப்ளார்கள் அதிகாரத்தைக் குவிப்பார்கள். இல்லை, கட்டற்ற சுதந்திரத்தின் மூலமாகவே அமைதியைக் கொண்டுவர முடியும் என்று அசாசின்கள் அதிகார பீடங்களைத் தகர்த்துக்கொண்டே இருப்பார்கள். இந்த அசாசின் குழு எப்படி உருவானது என்று சொல்லும் கேம்தான் இந்த ஒரிஜின்ஸ். 2007-ல் முதல் கேம் வந்தது. பத்து வருடங்கள் கழித்து பத்தாவது மெயின்ஸ்ட்ரீம் கேமாக ஒரிஜின்ஸ் வந்திருக்கிறது. இதற்கு முன்பு கடைசியாக வெளிவந்த யூனிட்டி (ப்ரெஞ்சுப் புரட்சி காலம்) மற்றும் சிண்டிகேட் (தொழிற்புரட்சி காலம்) சரியாக ஓடவில்லை (எனக்கு யூனிட்டி மிகவும் பிடித்தது, ஆனால் டெக்னிகல் பிரச்னைகள் நிறைய வந்து விளையாடும் மூடை ரொம்பவே கெடுத்தது). போச்சு, அசாசின்ஸ் க்ரீட் கேம் ...

அய்யப்பனும் Heteronormativity-யும்

நான் பார்த்து வியக்கும் சில நண்பர்கள் “என்ன அய்யப்பா, இனிமே ஜாலியா?” போன்ற பதிவுகளை ஷேர் செய்யும்போது சற்றே வருத்தமாக இருக்கிறது. Heteronormativity என்று இதற்குப் பெயர். அதாவது அய்யப்பனை ஓர்ப்பால் ஈர்ப்புள்ளவராகக் கற்பனை செய்ய முடியாது என்ற எண்ணத்தை நம்மை அறியாமல் மறைமுகமாகக் கடத்துவது. பாலின சிறுபான்மையினருக்கு இந்த ‘ஜாலியா’ போஸ்ட் சற்றே அசவுகரியத்தைக் கொடுக்கும். இன்றைய சபரிமலைத் தீர்ப்பு எனக்கு உண்மையில் கலவையான உணர்வுகளைத் தந்திருக்கிறது. வழக்கிற்கு சம்பந்தமில்லை என்றாலும் இந்தப் பிரச்னையில் பாலின சிறுமான்மையினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் இணைத்தே பார்க்கிறேன். LGBTQA+ சமூகம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அங்கீகரித்தே ஆகவேண்டும். ஏனெனில் ஒரு விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஒரு கடவுளைத் தங்களுடையதாக ஆக்கிக்கொள்ள முனைகிறார்கள் என்றால், அந்த முனைப்பிற்கு சமூக-அரசியல் நியாயங்கள் இருக்கின்றன. அந்த நியாயத்தை உணர வேண்டும். குறைந்தபட்சம் லிபரல்கள் என்று சொல்லிக்கொள்பவர்களாவது அதை உணர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு உண்டு. ஏனெனில் இது ஆண்-பெண் இருதுருவப் பி...

ஹீலம்

நாக்கு சுரசுரப்பாக இருக்கிறதா? கவலை வேண்டாம். இயற்கை மருத்துவத்தின் மூலம் வெறும் மூன்றே மூலிகைகளை வைத்து சரிசெய்துவிடலாம். முதலில் இரண்டு வில்வக் காம்புகள் தேவைப்படும். கடைக்கு சென்று தந்தநேரிக் காம்பு என்றோ தந்தநேரி வில்வக்கட்டை என்றோ கேட்கவும். கொடுப்பார்கள். அந்த வில்வக்காம்பின் நுனியில் இரண்டு தேக்கரண்டி புலிநெய்யைத் தடவ வேண்டும். வெள்ளைப்புலி நெய்யாக இருந்தால் கூடுதல் சிறப்பு. முடிந்தவரை தடவுவதற்கு அலுமினியக் கரண்டிகளைத் தவிர்த்து இளநீர் சுரட்டையை உபயோகித்தால் அதில் இருக்கும் கரிவிந்துவானது வெள்ளைப்புலி நெய்யோடு சேர்ந்து முறத்றால் புரோட்டீனை உருவாக்கும். அந்த முறத்றால் புரோட்டீன் வில்வக்காம்பின் நுனியில் படுகையில் முறோடைட் டையாக்சைடு என்றொரு துர்நாற்ற வாயு வெளிப்படும். அந்த நாற்றத்தைப் பார்க்காமல் கசப்பு மருத்தென நினைத்து நுகருங்கள், இதிலேயே பாதி சுரசுரப்பு போய்விடும். இப்பொழுது அந்தக் கரிவிந்து தடவப்பட்ட புலிநெய் வில்வக்கட்டை இருக்கிறதல்லவா? அதை சுருக்கமாக விந்துக்கட்டை என்று அழைப்பார்கள். அந்த விந்துக்கட்டையை ஒரு ஓரமாக வைத்துக்கொள்ளவும். நாட்டுமருந்துக்கடைக்குச் சென்று சத...

நிவாரண நிதி

கேரளத்திற்கு வெள்ள நிவாரண நிதி திரட்டப்படும் வழிமுறைகளைப் பார்த்தபோது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு முறை நினைவிற்கு வந்தது. இன்று முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு இணையம் மூலமாக இரண்டே நிமிடங்களில் பணம் செலுத்திவிடலாம். பே.டி.எம். வசதி இருக்கிறது. அமேஜான் மூலமாக பொருட்களையே நேரடியாக அளிக்கலாம். எண்ணற்ற சமூக நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பு வந்துவிட்டது. கார்கில் ஆக்கிரமிப்பு வந்த சமயம் எனக்கு ஆறு வயது. குஜராத் பூகம்பத்தின்போது எட்டு. பள்ளியில் நிவாரண நிதி அட்டை என்று ஒன்று கொடுத்தார்கள். அதில் நிதியளிப்பவரின் பெயர் மற்றும் நிதி அளவைக் குறிக்க இடம் இருக்கும். யார் இந்தப் பணத்தையெல்லாம் திரட்டியது என்று என் பெயர், முகவரி எழுத மேலே ஒரு இடம் இருக்கும். இரண்டு வாரங்கள் நேரம் கொடுத்தார்கள். ஒவ்வொருவரும் அவரவர் தெருக்களில் உள்ள வீடுகளின் கதவைத் தட்டி நிதி திரட்டினோம். ஐம்பது பைசா முதல் அரிதாக ஐம்பது ரூபாய் வரை வரும். நல்ல நோக்கத்திற்காக என்றெல்லாம் அந்த வயதில் தோன்றவில்லை. அடுத்தவரை விட அதிகமாக நிதி திரட்டவேண்டும் என்ற உந்துதலில் அலைந்தோம். அந்த துர்நிகழ்வுகளின் கோரம் தெரியாத வயது. வீட்...

கலைஞர்

கல்லூரியின் முதல் இரு ஆண்டுகள் பேருந்தில் பயணித்துதான் கல்லூரி சென்றேன். அதனால் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்தாக வேண்டும். இறுதி இரண்டு ஆண்டுகளின்போது விடுதிக்கு மாறியபின் ரூம்மேட்ஸ் எங்களுக்கு சற்றே சோம்பேறித்தனம் குடிகொண்டுவிட, சில மாதங்கள் தாமதமாக எழ ஆரம்பித்தோம். பிறகு ஒரு உத்வேகத்தில் நாங்கள் ஒரு ஒப்பந்தம் போட்டு “காலையில எழுறோம், ஜாகிங் போறோம். ஒருத்தன் தூங்கிட்டா எழுப்பி கூட்டிட்டுப் போறோம்” என்று திட்டம் போட்டோம். அப்பொழுதெல்லாம் சிலமுறை அதிகாலை ஐந்தேகால் மணிக்கு ஒருவரையொருவர் இப்படித்தான் எழுப்பியிருக்கிறோம் - “அங்க ஒரு கிழம் முரசொலிக்குத் தலையங்கம் எழுதிட்டு இருக்கு. வாடா!” அரசியல் நிகழ்வுகளில் அரைகுறை ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் பல நாட்களில் பேச்சின்போது ஏதாவது ஒரு கலைஞர் ரெபரன்ஸ் வந்துவிடும். அதிகாலை ஒருமணிநேரம் தலையங்கம் எழுதுவார், இரண்டு மணிநேரம் செய்தித்தாள்கள் வாசிப்பார் என்று கலைஞரின் டேபிளான் ஜூவியில் வெளியானபோது அதில் கவரப்பட்டுதான் நான் தினத்திட்டங்களே போட ஆரம்பித்தேன். மையக் கவர்ச்சியே அவருடைய வயதுதான். உடல்வலு உச்சத்தில் இருந்த வயது எனக்கு, அவரோ தினம் தினம் உழ...

"வந்துடுவானுகளே மனித உரிமையைத் தூக்கிட்டு..."

“வந்துடுவானுகளே மனித உரிமையைத் தூக்கிட்டு” என்று பல பதிவுகளைப் பார்த்தேன். அதனால் உந்தப்பட்டு எழுதுகிறேன். “மேற்கத்திய சமூகத்தில் குழந்தையைக் கடத்தி வன்புணர்வு செய்பவர்களை ஊரே சேர்ந்து  அடித்துக்கொல்லும்போது எப்படி வெகு சிலரே அவர்களுக்காக வருந்துவார்களோ, அதேபோல அவர்களின் சமூகத்தில் தெய்வ நிந்தனை செய்பவர்களை மக்கள் அடித்துக்கொல்லும்போது வெகு சிலரே அவர்களுக்காக வருந்துவார்கள்.” இஸ்லாமிய ஆய்வறிஞர் அந்தோனி மெக்ராய் எழுதிய வரிகள் இவை. சல்மான் ரஷ்டியின் ‘சாத்தானின் வரிகள்’ புத்தகம் வெளிவந்து மேற்கத்திய மற்றும் இஸ்லாமிய பொதுச்சமூகத்தினிடையே பெரும் பண்பாட்டுப் பிளவை ஏற்படுத்தியிருந்த பின்னணியில் இந்த வரிகளை அவர் எழுதினார். அற சார்பியல்வாதம் மற்றும் பண்பாட்டு சார்பியல்வாதம் (Moral & Cultural relativism) குறித்து அங்கிருந்துதான் என் வாசிப்பு துவங்கியது. தனிமனித நீதியுணர்வு என்பது பலவகைகளில் சிக்கலானது. தனக்கான எல்லைக்கோட்டை அது தன்னுடைய பண்பாட்டு விழுமியங்களில் தேடுகிறது. அவ்வாறு தேடிக் கண்டடைகையில் அந்த எல்லைக்கோட்டிற்குக் கீழே உள்ள பிற நீதியுணர்வுகளையெல்லாம் அது காட்டுமிராண்டித்தன...

பப்ஜி

தம்பியின் நண்பர் ஒருவர் தீவிர பப்ஜி ரசிகர். PlayerUnknown's Battlegrounds என்பதன் ‘சிறுபெயர்’தான் பப்ஜி. ஆண்டிராய்டில் இலவசமாகக் கிடைக்கும் துப்பாக்கிச்சூடு விளையாட்டு அது. ஒரே நேரத்தில் பலர் அதில் விளையாடலாம். நூறு பேர் ஒருவரையொருவர் சுட்டுக்கொல்ல வேண்டும், இறுதியில் எவர் எஞ்சியிருக்கிறாரோ அவரே கெலித்தவர். தமிழ்க்கீச்சுலகம் கடந்த சில மாதங்களாக அந்த விளையாட்டினால்தான் கோமாவில் கிடக்கிறது. நிற்க. அந்த நண்பர் ஒரு மரண கேமர். பாத்ரூமில் ஒரு கையால் பப்ஜியாடிக்கொண்டேதான் மைக்ரோநீர் கழிப்பார். நெர்ட் மாணவராக மாறுவேடம் பூண்டு கல்லூரி நூலகத்தில் இஸ்லாமிய மறுமலர்ச்சி என்னும் தடிபுக்கை எடுத்துக்கொண்டு அதற்குள் மொபைலை வைத்து விளையாடுவார். இவற்றையோ இவற்றிற்கு ஒப்பானவற்றையோ செய்தால்தான் அவர்கள் மரண கேமர்கள். அன்னாரின் மொபைல் ஒருகட்டத்தில் விளையாடி விளையாடி களைத்துப்போய் ஸ்லோ ஆகிவிட்டது. இவருக்கோ விரலால் திரையை வலித்து வலித்துக் காத்திருந்து பொறுமை போய்விட, சுற்றியிருந்தவர்களிடம் எரிந்து விழ ஆரம்பித்தார். பிறகு கை நடுக்கம் வந்துவிட, லஸ் கார்னரில் ஒரு சர்வீஸ் சென்டருக்குப் போயிருக்கிறார். மொபைல...

ரோமா

என்னியோ மாரிகோனி வசிக்கும் ஊருக்கு வந்திருக்கிறேன். ரோமாபுரியின் தெருக்களில் அலைகையில் நிறைய வயோதிகர்கள் தென்படுகிறார்கள். இரண்டு பேரைக் குறிப்பாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இங்குதான் அன்டோனியோவின் சைக்கிள் திருடுபோனது. பட்டப்பகலில் கண் முன்னே நடந்த சம்பவம். அன்டோனியோவால்  அத்திருடனை விரட்டிப் பிடிக்க முடியவில்லை. அந்த சைக்கிள் இல்லாவிட்டால் வேலை போய்விடும். அந்த வேலைக்காகத்தான் படுக்கை விரிப்புகளையெல்லாம் விற்று அந்த சைக்கிளை அடகுக் கடையிலிருந்து மீட்டிருந்தான் அன்டோனியோ. போய்விட்டது. அவனும் அவனுடைய மகனான குட்டிப்பையன் ப்ரூனோவும் அந்த சைக்கிளைத் தேடி ரோமாவை சுற்றியலைந்தார்கள். கிடைக்கவேயில்லை‌. ப்ரூனோவுக்குப் பசியெடுக்க, அன்டோனியோ வேறு வழியில்லாமல் வேறொரு சைக்கிளைத் திருடப்போக, தப்பிக்கத் தெரியாமல் ஒரு கும்பலிடம் மாட்டிக்கொண்டான். ஊரே ஒன்று சேர்ந்து அவனை அடித்துத் துவைத்துவிட்டது. தன் மகனின் கண்முன்னே திருட்டுப்பட்டம் பெற்று அடி வாங்கியதில் அன்டோனியோவுக்கு ஒருபுறம் அவமானம் பிடுங்கித் தின்ன, மறுபுறம் தன்னுடைய திருட்டிற்கான அத்தனை நியாயங்களும் நிழலாடியதில்...

சேப்பாக்க செருப்பு வீச்சு

இந்தப்பக்கம் போராட்டத்தை ஆதரித்தால் வன்முறைக்கான ஆதரவு உண்டோ, மஞ்சள் சட்டைகளை அடிப்பதும் பாம்புகளை விடுவோம் என்று மிரட்டுவதும்தான் போராட்டமோ என்று‌ விமர்சிக்கப்படுகிறது. அந்தப்பக்கம் மைதானத்திற்கு வந்தால் அது இனத்துரோகம், காவிரி குறித்து அக்கறை இல்லை என்று இன உணர்வு அதீதமாக வெளிப்படுத்தப்படுகிறது. காவிரியை இப்படியா பெறுவது என்று போராட்டக்காரர்களின் வன்முறை மீது பலர் வைக்கும் விமர்சனத்திற்கு இணையாக, CSK-வுக்கு இந்த முறையிலா ஆதரவளிப்பது என்று ஒரு குறிப்பிட்ட விமர்சனம் எனக்கு இருக்கிறது: Mob mentality என்று போராட்டத்தைப் புறம் தள்ளியவர்களோ மைதானத்திற்குள் செருப்பு வீசப்பட்டதும் mob mentality-யில் CSK CSK என்று கத்திய விதம் எனக்கு அருவெறுப்பைத் தந்தது. என் குரல் உலகத்தில் எப்படியாவது கேட்கப்படவேண்டும் என்று கையறு நிலையில் உணர்வுகளால் உந்தப்பட்டு உலகமெங்கும் செருப்புகள் தனிமனிதர்களால் வீசப்பட்டிருக்கின்றன. மைதானம் நோக்கி எறியப்பட்ட செருப்பு ஏதோ ஜடேஜா டூப்ளசி மீது எறியப்பட்டதுபோல நினைத்துக்கொண்டு, டூப்ளசி நாட்டின் தலைநகரான கேப் டவுனிலும் தண்ணீர் இல்லை என்றெல்லாம் பாடம் புகட்டப்படுகிறது. ச...

நூலிலிருந்து சீரிஸ் - 4: இலையுதிர்கால இல்லுமினாட்டிகள்

// கேள்வி : அதெப்படி கமலுடைய கட்சி சின்னத்தைப் பார்த்தே அவர் ஒரு இல்லுமினாட்டி என்று முடிவு கட்டுகிறீர்கள்? - க.பாஸ்கரன் பதில் : அன்புள்ள பாஸ்கரன். உங்கள் கேள்விக்கான பதிலை இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். ஒன்று, அதெப்படி கமலை இல்லுமினாட்டி என்று சொல்கிறோம்? அந்த சின்னத்தில் ஆறு கைகள் பாஸ்கரன். அதாவது ஆறு குடும்பங்கள். அதற்கு நடுவில் ஆறு முனைகள் கொண்ட நட்சத்திரம் பாஸ்கரன், அதாவது இன்னொரு ஆறு குடும்பங்கள். ஆறையும் ஆறையும் கூட்டிப்பாருங்கள், பதினான்கு வருகிறதா? இப்பொழுது அந்த நட்சத்திரத்திற்கும் கைகளுக்கும் இடையே இருக்கும் வெற்றிடத்தை ஒன்று என்று எடுத்துக்கொண்டு அதை பதினான்கோடு கழியுங்கள். பதிமூன்று! பதிமூன்று குடும்பங்... வெயிட். கணக்கு தப்பாக வருகிறது. மன்னிக்கவும் ஆறும் ஆறும் பன்னிரண்டா? ம்ம்ம், அப்படியென்றால் அந்த வெற்றிடத்தைக் கழிப்பதற்கு பதிலாக கூட்டிவிடுங்கள் பாஸ்கரன். 6+6+1. பதிமூன்று! பதிமூன்று குடும்பங்கள்! இல்லுமினாட்டி! இரண்டாவதாக, ‘அதெப்படி சின்னத்தைப் பார்த்தே இல்லுமினாட்டி என்று சொல்கிறீர்கள்’ என்று அறிவுக்கெட்டத்தனமாகக் கேட்டிருக்கிறீர்கள். எங்களின் சிந்தனைப்போக்கு உங்...

எழுந்து நிற்காமை

தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காதவர்களை தேச விரோதிகள் என்று சொல்வது எவ்வாறு தவறோ, அதே போல் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காதவர்களைத் தமிழின விரோதிகள் என்று சொல்வதும் தவறு - என்ற பொருளில் நண்பர்கள் சிலர் ஒப்பீடு செய்ததைக் கண்டேன். இரண்டும் ஒன்றுதான், வித்தியாசமே இல்லை என்பது இறுக்கமான பார்வை. இரண்டிற்கும் இடையே ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. இரு தரப்பினரின் காரணமும் நியாயமும் வெவ்வேறானவை. தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காவிடில் தேச விரோதி என்று சொல்பவர்கள் தேசிய கீதத்தை இந்திய ஒற்றுமையின் குறியீடாகப் பார்ப்பவர்கள். அதற்கு எழுந்து நிற்காதவர்களை அந்த ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாகக் கருதுபவர்கள். பெரும்பான்மை எழுந்து நிற்க விருப்பப்படுவதைத் தவிர வேறென்ன நியாயம் வேண்டும் அதைக் கட்டாயமாக்குவதற்கு என்று நினைப்பவர்கள். பெரும்பான்மைதான் அவர்கள் வைக்கும் அங்கீகாரம், அதற்கு எதிரானவர்கள் அவர்கள் பார்வையில் தேச விரோதிகள். தற்காலத்தில் இதற்குள் இந்து மத விரோதி என்ற கிளையும் அதீதமாக உண்டு. தேசிய கீதத்தை வைத்து வேண்டுமென்றே பிரிவினை அரசியல் செய்பவர்கள் அல்லாது, மெய்யாகவே நாட்டின் ஒற்றுமையின்பால...

தாராளவாத ஜனநாயகத்தை அடைய குறுக்கு வழிகள் கிடையாது

தாராளவாத ஜனநாயகத்தை அடைய குறுக்கு வழிகள் கிடையாது. தாராளவாதப் போக்குடைய மக்கள் இல்லாதவரை தாராளவாத ஜனநாயகம் சாத்தியமில்லை. ஜனநாயகம் என்பது வெறும் உடல்தான். அதற்கு உயிரூட்டுவது தாராளவாதமே. தன்னுடைய தனித்துவ பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கியதொரு தாராளவாதக் கொள்கையை ஒரு நாடு கண்டெடுக்காதவரை, அவற்றைப் பரவலாக்காத வரை, அந்நாட்டில் தாராளவாத மக்கள் உருவாக மாட்டார்கள். இதில் குறுக்குவழிகள் இல்லவே இல்லை. தாராளவாத ஜனநாயகம் உங்கள் நாட்டில் நிலைபெற விரும்பினால், அதற்குத் தேவையான அறிவியக்கத்தில் உங்களை இணைத்துக்கொள்ள நீங்கள் நேரத்தை ஒதுக்க வேண்டும். சகிப்புத்தன்மையற்ற ஜனநாயகத்தின் ஆபத்து வெறும் சகிப்பின்மை மட்டுமல்ல; நிலையின்மையும் உறுதியின்மையும் அதன் அடிப்படை இயல்புகளாகும். ஜனரஞ்சக அரசியல் தலைவர்கள் சகிப்பின்மையோடு இருப்பது அல்ல பிரச்னை. பிரச்னை என்னவென்றால், இவர்களுக்கு வெகுமக்கள் ஆதரவும், பரவலான வாக்கு வங்கியும் இருப்பதுதான். “நம்முடைய தனித்துவ உயரிய தேசத்தை ஆபத்தான ‘மற்றவர்களும்’ ‘பண்பாட்டை மறந்த மேட்டுக்குடியினரும்’ தனதாக்கிக்கொள்கிறார்கள்; நம்மிடமிருந்து நம் உரிமத்தைப் பிடுங்கிக்க...

ஆணாதிக்க சிந்தனைகளிலிருந்து வெளியேற முயற்சிக்கும் ஆண்களுக்கு - Ejike

முன்குறிப்பு: கீழே ‘ஆண்’ என்ற சொல் பலமுறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சில சமயம் அது ஆண் என்னும் பாலியல் அடையாளத்தைக்(ஆண்) குறிக்கிறது, பல முறை அது ஆண் என்னும் ஆதிக்க அடையாளத்தைக்(ஆவ்ம்பள) குறிக்கிறது. ஒரே வாக்கியத்திலேயே இரண்டும் வரலாம். எனவே இதைப் படித்துவிட்டு ‘எல்லா ஆணும் அப்படியா?’ என்று நீங்கள்  ஆண் சமூகத்திற்காகப் பொங்கினால், ஒன்று நீங்கள் அடையாளங்களை மாற்றிப் போட்டுக் குழப்பிக்கொண்டீர்கள் என்று அர்த்தம். அல்லது ஆதிக்க ஆணாகவே நீங்கள் இருக்கிறீர்கள் என்று அர்த்தம், அல்லது இந்தப் பதிவு எளிமையாக எழுதப்படவில்லை என்று அர்த்தம். ட்விட்டரில் Ejike என்னும் பதிவர் எழுதியவற்றின் மொழிபெயர்ப்பு இது. ------------------------------------------------------------- ஆணாதிக்க சிந்தனையிலிருந்து வெளியே வரும் ஆண்கள், பிற ஆண்களின் வன்முறைக்குப் பெண் சமூகம் உள்ளாக்கப்பட்டு வருகிறது என்பதை அங்கீகரிக்க வேண்டும். ‘அடடா, சக ஆணை விட இவன் மேலானவனாக இருப்பான் போலவே’ என்று பிற ஆண்களையும் உங்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்கும் பெரும்பணியைப் பெண்கள் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. ...